News March 11, 2025
NEP விவகாரம்: பிரதானுக்கு அன்பில் மகேஷ் பதிலடி

தேசிய கல்விக் கொள்கையை(NEP) முதலில் ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு பின்னர் யூ-டர்ன் அடித்ததாக பார்லிமென்டில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், தவறான தகவலைப் பரப்புவது உண்மையை மாற்றிவிடாது எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கல்விக் கொள்கையை குறைத்து மதிப்பிடும் தேசிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்ப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 12, 2025
சென்செக்ஸ் 102 புள்ளிகள் உயர்வு!

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை நேர வர்த்தகப்படி சற்று உயர்வைக் கண்டுள்ளன. சென்செக்ஸ் 102 புள்ளிகள் உயர்ந்து 74,270ஆகவும், நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 22,536ஆகவும் வர்த்தகமாகிறது. இதனால், முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதேநேரத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா சரிந்து ₹87.22 ஆக உள்ளது.
News March 12, 2025
அப்பா என்றால் சிலருக்கு கசப்பு : சந்துரு தாக்கு

மத்திய பாஜக அரசை திடமாக எதிர்க்கும் ஒரே முதல்வர் ஸ்டாலின் என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். ஒரு தேசம், ஒரு தேர்தல் எனக்கூறி தனக்குத் தானே முடிசூட்டிக் கொள்ள ஒரு தலைவர் தயாராகி கொண்டிருக்கிறார் என மோடியை விமர்சித்த அவர், மாணவர்களுக்கு காலை உணவு அளிப்பவரை அப்பா என்று சொன்னால் என்ன தவறு. அப்பா என்ற சொல்லைக் கேட்டால் சிலருக்கு கசப்பாக இருக்கிறது என சாடியுள்ளார்.
News March 12, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹360 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 12) சவரனுக்கு ₹360 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,065க்கும், சவரன் ₹64,520க்கும் விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ₹2 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் வெள்ளி ₹109க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,09,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹240 குறைந்திருந்த நிலையில், மீண்டும் இன்று உயர்வை கண்டுள்ளது.