News April 14, 2024
முடி உதிர்வை தடுக்கும் நெல்லி தேநீர்

மலக்குடலில் தேங்கி நிற்கும் நச்சு கழிவுகளை நீக்கி, முடி உதிர்வை தடுக்க நெல்லி தேநீரை பருகலாம் என சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். பாத்திரத்தில் நெல்லிச் சாறை ஊற்றி கொதிக்க விடவும். அது நன்றாக கொதித்தவுடன் அதில் இஞ்சி, மிளகு தூள் சேர்த்து இறக்கி விடவும். குடிக்கும் சூட்டில் அதனை வடிகட்டி தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து 45 நாள்கள் பருகி வந்தால் முடி உதிர்வு நிற்குமாம்.
Similar News
News December 3, 2025
மீண்டும் அஜித் Vs விஜய் மோதல்

நீண்ட நாள்களுக்கு பிறகு தியேட்டர்களில் அஜித், விஜய் படங்கள் மோதுகின்றன. சில நாள்களுக்கு முன்பு ரீ-ரிலீசான அஜித்தின் அட்டகாசத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில், விஜய்யின் காவலன் டிச.5-ம் தேதி ரீ-ரிலீசாகிறது. இதையடுத்து இரு நட்சத்திரங்களின் ரசிகர்களும், பாக்ஸ் ஆபிஸில் தங்களது பலத்தை காட்ட ஆவலோடு உள்ளனர். ஹிட் அடிக்க போவது யார்?
News December 3, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 3, கார்த்திகை 17 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 6.30 PM – 7.30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News December 3, 2025
தியேட்டரில் ரொமான்ஸ் செய்த ஜோடிகள்.. வீடியோ வைரல்

கேரளாவில் தியேட்டரில் காதல் ஜோடிகள் ரொமான்ஸ் செய்த வீடியோக்கள் டெலிகிராம், X தளத்தில் வைரலாகி வருகிறது. அரசு நடத்தும் தியேட்டர்களின் CCTV காட்சிகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறைபாடு காரணமாக இதனை எளிதில் ஹேக் செய்துவிடுவதாக நிபுணர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேநேரத்தில், தியேட்டரில் காதல் ஜோடிகள் அத்துமீறுவது சரியல்ல என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.


