News March 28, 2024

₹40 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் பசு

image

நெல்லூர் இனத்தைச் சேர்ந்த பசு ஒன்று பிரேசிலில் ₹40 கோடிக்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓங்கோல் வகையைச் சேர்ந்த இந்த நெல்லூர் பசு ஆந்திராவை பூர்வீகமாக கொண்டது. பால் வெள்ளை நிறத் தோலுடன் வித்தியாசமான திமிலையும் இந்தப் பசு கொண்டிருக்கிறது. இந்த நிலையில், வியாட்டினா என்ற பெயர் கொண்ட 4 வயதுடைய நெல்லூர் பசுவை பிரேசிலை சேர்ந்த ஒருவர் $4.3 மில்லியனுக்கு (₹40 கோடி) ஏலத்தில் எடுத்துள்ளார்.

Similar News

News October 17, 2025

எப்படி இருக்கிறது பைசன்: காளமாடன்?

image

கபடி விளையாட்டும், அதனை சுற்றி நடக்கும் அரசியலும்தான் ‘பைசன்: காளமாடன்’. ப்ளஸ்: எழுத்தாளராக மாரி செல்வராஜ் மீண்டும் வென்றிருக்கிறார். கடைசி 20 நிமிடங்களில் அசத்தி விட்டார். துருவ் விக்ரம் கடின உழைப்பை கொடுத்துள்ளார். பசுபதி திரையில் மிரட்டுகிறார். நிவாஸ்.கே.பிரசன்னாவின் இசை வருடுகிறது. பல்ப்ஸ்: காதல் காட்சிகள் அழுத்தமாக இருந்திருக்கலாம். சில இடங்களில் படம் கொஞ்சம் சலிப்பை கொடுக்கிறது.

News October 17, 2025

டிகிரி முடித்தாலே அரசு வேலை; APPLY NOW!

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1588 காலியிடங்கள் உள்ளன. Graduate Apprentices, Technician (Diploma) Apprentices, Non-Engineering Graduate Apprentices ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை. இப்பணிகளுக்கு ₹9,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. டிகிரி முடித்த இளைஞர்கள் அக்.18-ம் தேதிக்குள் nats.education.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பியுங்கள். வேலை தேடும் இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 17, 2025

பேரவையிலேயே எதிரொலித்த பாமக பஞ்சாயத்து

image

சட்டப்பேரவையில் இருமல் சிரப் விவகாரத்தில் பாமக MLA அருளை பேச அனுமதித்ததற்கு, அன்புமணி தரப்பு MLA-க்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் அவையின் மாண்பு கெடுவதாக கூறிய சபாநாயகர், பாமக பஞ்சாயத்துகளை பேரவைக்கு வெளியே வைத்துக்கொள்ளும்படி கூறினார். மேலும், இருமல் சிரப் விவகாரத்தில் முதலில் கடிதம் போட்டது MLA அருள்தான் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.

error: Content is protected !!