News June 30, 2024

நெல்லை காவல்துறை எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இன்று (ஜூன்.30) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் SBI reward points மூலமாக சைபர் குற்றவாளிகளின் மோசடியில் சிக்கி விடாதீர்கள். மொபைலில் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் முன் நன்கு யோசியுங்கள். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime. gov. in/ ல் புகார் அளிக்கவும். மேலும் 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News July 9, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஜூலை-09] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News July 9, 2025

நெல்லை: சிறுமியை கொலை செய்து கற்பழித்த வாலிபர்

image

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில், 17 வயது சிறுமியை காதலித்து வந்த மாரிமுத்து (26) என்பவர், அப்பெண் தன்னை தவிர வேறு ஒருவருடன் பேசியதால் கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்த நிலையில், சிறுமி இறந்தப்பின் அவரது உடலை கற்பழித்ததாகவும் அந்த வாலிபர் வாக்குமூலம் அளித்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீசார் மாரிமுத்துவை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 9, 2025

நாங்குநேரி டோல்கேட்டில் நாளை முதல் பேருந்து தடை

image

கப்பலூர், எட்டுராவட்டம், சாலைப்புதூர், நாங்குநேரி சுங்கச்சாவடிகளில் நாளை முதல் அரசுப் பேருந்துகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.276 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை அரசு போக்குவரத்து கழகங்கள் செலுத்தாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால், தென் மாவட்ட மக்களின் பயணங்கள் பாதிக்கப்படும் என அச்சம் எழுந்துள்ளது. * மக்களே உங்கள் பயணங்களை முன் கூட்டியே திட்டமிடவும்*

error: Content is protected !!