News August 5, 2024

நெல்லை மேயர் கிட்டு (எ) ராமகிருஷ்ணன் தேர்வு

image

நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பவுல்ராஜ் மற்றும் கிட்டு (எ) ராமகிருஷ்ணன் இருவரும் போட்டியிட்டனர். இந்நிலையில், நெல்லை மாநகராட்சி மேயராக கிட்டு (எ) ராமகிருஷணன் தேர்வாகியுள்ளார். கிட்டு (எ) ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்றார். மேலும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 13, 2026

நெல்லையில் நாளை குறை தீர்ப்பு முகாம் – கலெக்டர்

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம் நாளை (மார்ச்.14) காலை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News March 13, 2026

நெல்லை: டிகிரி போதும்.. ரூ.65,000 சம்பளத்தில் வேலை ரெடி

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant Manager பதவிகளுக்கான 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 21-30 வயதுடைய ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.65,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 13, 2026

நெல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவருக்கு தூக்கு தண்டனை

image

அழகிரிபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த் சேகர் (42). இவர் 2023 ஆம் ஆண்டு நெல்லை மேலப்பாளையம் பகுதியில் இருந்த 6, 7 மற்றும் 8 வயதுடைய 3 சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவருக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கும் தலா ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!