News August 11, 2024
நெல்லை காங். எம்.பி. இன்றைய சுற்றுப்பயண விவரம்

நெல்லை பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் இன்று காலை 10மணி அளவில் நகை கடையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.தொடர்ந்து 10.30 மணிக்கு மாலைமுரசு அலுவலகத்தில் ராமச்சந்திர ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் மதியம் 1.00அளவில் மேலச்செவல் தேவாலயத்தில் தோத்திரப் பண்டிகையில் கலந்து கொள்கிறார். மாலை 5 மணிக்கு கச்சநல்லூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார்.
Similar News
News December 9, 2025
நெல்லை: மயங்கி விழுந்த விவசாயி பலி

நெல்லை, திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வெள்ளத்துரை (50). இவருக்கு நீண்ட நாட்களாக இதய நோய் இருந்து வந்தது. நேற்று தனது வயலுக்கு சென்ற போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News December 9, 2025
நெல்லை: SBI வங்கியில் வேலை., தேர்வு இல்லை! APPLY

நெல்லை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <
News December 9, 2025
நெல்லை: விவசாயி தூக்கிட்டு தற்கொலை

திருநெல்வேலி, முக்கூடல் அருகே உள்ள தாளார்குளம் கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன் துரைராஜ் மகன் ஆரோக்கியஜோதி (46). விவசாயியான இவர் தீடிரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த முக்கூடல் போலீஸார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து முக்கூடல் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


