News July 3, 2024
நெல்லை திமுக மேயர் ராஜினாமா

நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நெல்லை மாவட்ட திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள், சரவணன் மீது அடுக்கடுக்கான புகார்களை தலைமையிடம் கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மேயர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ள அவர், தனது ராஜினாமா கடிதத்தையும், மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். முன்னதாக, கோவை ஆணையர் கல்பனாவும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 19, 2025
புதுச்சத்திரம் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே, ஏ.கே. சமுத்திரத்தை சேர்ந்தவர் மணி, 60; தனியார் நிறுவனத்தில், இரவு நேர காவலாளி. இவர், நேற்று முன்தினம் காலை, பாச்சல் பிரிவில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து. புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை: மீண்டும் மழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.