News August 5, 2024
ஓ.பி.எஸ்-யிடம் வாழ்த்து பெற்ற நெல்லை நிர்வாகி

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நெல்லை மாநகர மாவட்ட செயலாளராக நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் நெல்லையின் அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தினர்.
Similar News
News January 18, 2026
நெல்லை: இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஹரி (18) தனது நண்பர் பாலாஜியை சந்திக்க சி.என் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது பாலாஜி, டவுனை சேர்ந்த பாஞ்சாலராஜன் என்பவரின் மாமியாரிடம் தான் கொடுத்த கடனை கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாஞ்சாலராஜன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஹரியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தவெள்ளத்தில் ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் பாஞ்சாலராஜனை கைது செய்தனர்.
News January 18, 2026
நெல்லை: கஞ்சாவை வைத்து கொண்டே போலீசுக்கு மிரட்டல்!

பாளை போலீசார் ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த எம்.கே.பி நகரை சேர்ந்த முத்துசாமி (36) என்பவரை சோதனை செய்ய முற்பட்டபோது காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறு பேசி அச்சுறுத்தியுள்ளார். அவரை சோதனை செய்ததில் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 240 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து முத்துசாமியை கைது செய்தனர்.
News January 18, 2026
மாநகர காவல் துறை முக்கிய வேண்டுகோள்

பொதுமக்கள் தங்களின் அலைபேசியில் காவல் உதவி (Kaaval Uthavi App) என்ற செயலியை பதிவிறக்கம் செய்வது நல்லது. இதன்மூலம் தங்களுக்கோ தங்களை சார்ந்தவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த செயலியில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் தாங்கள் இருக்கும் இடத்திற்கு காவல் உதவி வந்து சேரும். இந்த செயலியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தயங்காமல் பயன்படுத்தலாம் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.


