News June 30, 2024
நெல்லை: 31 பேர் பணியிட மாற்றம்

நெல்லை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களில் பணியாற்றி வந்த சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட 31 பேரை நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்துள்ளதாக நெல்லை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், பணியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
நெல்லை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (செப்.13) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News September 13, 2025
நெல்லை மக்களே அனைத்து வரிகளும் இனி ஒரே இடத்தில்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <
News September 13, 2025
நெல்லை:பாலத்தில் தூங்குபவர்களை தடுக்க முயற்சி

திருநெல்வேலியின் முக்கிய அடையாளமாக திருவள்ளுவர் இரண்டு அடுக்கு மேம்பாலம் உள்ளது. கீழ்பாலத்தில் உள்ள சுவர் விளிம்புகளில் பலர் ஆபத்தை உணராமல் படுத்து தூங்குகின்றனர். இதை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறை சார்பில் தற்போது இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகமது அயூப் நெடுஞ்சாலைத்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.