News August 11, 2024
நெல்லை-செங்கல்பட்டு சிறப்பு ரயில்

சுதந்திர தின விழாவையொட்டி தொடர் விடுமுறையால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நெல்லையிலிருந்து செங்கல்பட்டிற்கு ஆக. 13, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், மறுமார்க்கத்தில் செங்கல்பட்டிலிருந்து ஆக.14,19 ஆகிய தேதிகளில் மாலை 05.55 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று(ஆக.,11) காலை 8 மணிக்கு தொடங்கியது.
Similar News
News September 19, 2025
நெல்லையில் ரூ.10 கோடி மதிப்பிலான கஞ்சா அழிப்பு

தென் மாவட்ட போலீசார், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் அதிரடியான செயல்பாட்டை காட்டியுள்ளனர். நாங்குநேரி அருகே பொத்தையடி பகுதியில் உள்ள தனியார் எரியூட்டு நிறுவனத்தில், ரூ.10 கோடி மதிப்புடைய 2,000 கிலோ கஞ்சாவை எரித்து அழித்தனர். இந்த நடவடிக்கை, போலீசாரின் தீவிர கண்காணிப்பின் விளைவாக நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களில், போலீசார் மொத்தம் 3,000 கிலோ கஞ்சாவை தீக்கிரையாக்கியுள்ளனர்.
News September 19, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்டம்பர் 18) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News September 18, 2025
நெல்லை அரசு பள்ளியில் மாணவர்கள் கோஷ்டி மோதல்

ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவர்கள் இன்று காலை ஒருவரை ஒருவர் தாக்கி கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து ஆசிரியர்கள் அங்கு விரைந்து வந்த நிலையில் மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும் மாணவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.