News June 28, 2024
நெல்லை: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

நெல்லை உட்பட 7 மாவட்டங்களில் இன்று(ஜூன் 28) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.
Similar News
News November 6, 2025
JUST IN: நெல்லையில் தோற்றால் பதவி பறிப்பு – ஸ்டாலின் அதிரடி!

நெல்லையில் உடன்பிறப்பே வா நடைபெற்ற நிகழ்வில் நெல்லை, தென்காசி மாவட்ட திமுக நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் என மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை. நெல்லையில் நயினார் நாகேந்திரன் மறுபடியும் போட்டியிட வாய்ப்புள்ளது. எனவே நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் என திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
News November 6, 2025
நெல்லை: இனி RTO ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்.!

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News November 6, 2025
நெல்லையில் ரூ.69.95 கோடியில் ஒப்பந்தபுள்ளி வெளியீடு

நெல்லையில் காயிதே மில்லத் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து பாளையில் 3 ஏக்கர் நிலம் தேர்வான நிலையில் அமைச்சர், அதிகாரிகள் அங்கு நேரில் ஆய்வு செய்தனர். இதற்கு ரூ.69.95 கோடி மதிப்பில் ஒப்பந்தபுள்ளி வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள கட்டுமான நிறுவனங்கள் நவ.13 க்குள் விண்ணப்பிக்கலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


