News June 26, 2024
நெல்லை: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

நெல்லை உட்பட 8 மாவட்டங்களில் இன்று(ஜூன் 26) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.
Similar News
News November 22, 2025
வீட்டுக்கு வந்தவர் 16 பவுன் நகையுடன் ஓட்டம்: கேரளாவில் சிக்கினார்

சுத்தமல்லியை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி செல்வி இவரது வீட்டுக்கு உறவினரான கங்காதேவி என்பவர் தனது ஆண் நண்பர் ஐயப்பன் என்பவருடன் வந்துள்ளார். திடீரென இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர். அதே நேரத்தில் பீரோவில் இருந்த 16 பவுன் நகை திருடு போனது. இது குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி கேரளாவில் பதுங்கி இருந்த ஐயப்பனை கைது செய்து அவரிடமிருந்து தங்க நகையை மீட்டனர்.
News November 22, 2025
நெல்லையில் ரூ.14.77 கோடிக்கு அடிக்கல் நாட்டல்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி விஜயாபதி ஊராட்சியில் நேற்று (நவ. 21) காலை 10.45 மணிக்கு ரூபாய் 14.77 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மையம் அமைப்பதற்காக தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான C.ராபர்ட் புரூஸ் இணைந்து அடிக்கல் நாட்டினர். உடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
News November 22, 2025
நெல்லையில் ரூ.1.95 கோடியில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் லெவிஞ்சிபுரம் ஊராட்சி, கூட்டப்புளி மீனவ கிராமத்தில், 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பில், மீனவப் பெண்களுக்கான, கடல் பொருட்கள் மதிப்புக்கூட்டல் மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவை அமைப்பதற்காக, திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சி.ராபர்ட் புரூஸ் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் நேற்று (நவ 21) காலை அடிக்கல் நாட்டினார்.


