News January 3, 2025

15% பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய அண்டை மாநிலம்

image

கர்நாடகாவில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. வரும் 5ஆம் தேதி முதல் அங்கு 15% பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகளிருக்கு வழங்கப்படும் இலவச பேருந்து பயணத்தால் மாதம் ரூ.417 கோடி இழப்பு ஏற்படுவதாகவும், அதை ஈடு செய்யவே இந்த கட்டணம் உயர்வு என்றும் கூறப்படுகிறது.

Similar News

News September 12, 2025

நக்சலைட்கள் அனைவரும் சரணடைய வேண்டும்: அமித்ஷா

image

சத்தீஸ்கரில் 10 நக்சலைட்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இதுபற்றி X-ல் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, CRPF, கோப்ரா கமாண்டோஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் கூட்டாக நடத்திய ஆபரேஷனில் தலைக்கு ₹1 கோடி அறிவிக்கப்பட்ட நக்சலைட் மனோஜ் உள்பட 10 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். விதித்த கெடுவுக்குள் அனைவரும் சரண்டர் ஆகணும். சிவப்பு பயங்கரவாதத்துக்கு மார்ச் 31 தான் கெடு என்று X-ல் எச்சரித்துள்ளார்.

News September 12, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப்.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News September 12, 2025

₹450 கோடியில் அமையும் தொழிற்சாலைக்கு CM அடிக்கல்

image

ஓசூரில் ₹450 கோடியில் அமையும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்கு CM ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்வதாக கூறினார். டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன விரிவாக்கம் மூலம், 400-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் CM உறுதியளித்தார்.

error: Content is protected !!