News November 24, 2024

இந்திய அணியில் புறக்கணிப்பு, ஆனால் IPLஇல் அதிர்ஷ்டம்

image

உள்நாட்டு போட்டிகளில் விளையாடவில்லை எனக் கூறி, இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் இசான் கிஷண், ஷ்ரேயஸ் ஐயர். இதனால் நீண்ட நாள்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் ஏலத்தில் ஷ்ரேயஸ் ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார். அதேபோல், இசான் கிஷண் சன்ரைசர்ஸ் அணியால் ரூ.11.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.

Similar News

News November 27, 2025

செங்கோட்டையன் முடிவு தற்கொலைக்கு சமம்: செம்மலை

image

பழுத்த இலை விழுவதால் மரத்திற்கு எந்த சேதமும் இல்லை. அதுபோல செங்கோட்டையன் சென்றதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று செம்மலை தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது தற்கொலைக்கு சமமான முடிவு என்று விமர்சித்த அவர், தலைமைக்கே சவால் விடும் செங்கோட்டையன் போன்ற நபர்கள் இருக்கும் வரை கட்சியில் குழப்பம்தான் நீடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

News November 27, 2025

விவசாயிகளின் முதுகில் குத்தியவர் EPS: ரகுபதி

image

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஆதரித்து, விவசாயிகள் முதுகில் குத்தியவர் EPS என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நெல் ஈரப்பத அளவை உயர்த்தாத மத்திய அரசை கண்டிக்காமல், திமுகவை குறை கூறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய அரசு என்றால் அமைதியாக இருக்கும் EPS, திமுக என்றால் ஆவேசமாகி விடுவதாகவும் விமர்சித்துள்ளார். EPS-க்கு வீரத்தை ஊட்டுவதே திமுகவின் செயல்பாடுகள் தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 27, 2025

பிஸினஸாக மாறிய தளபதி திருவிழா!

image

விஜய்யின் கடைசி குட்டி ஸ்டோரியை நேரில் கேட்டு விட வேண்டும் என்ற ஆவல் தமிழக விஜய் ரசிகர்களிடமும் உள்ளது. இதனை கவனித்த டிராவல்ஸ் நிறுவனம், அதனை சூப்பர் பிஸினஸாக மாற்றியுள்ளது. தளபதி கச்சேரிக்கான ஃப்ரீ டிக்கெட்டுடன் 3 நாள் ட்ரிப்பாக மலேசியா கூட்டி செல்கின்றனர். இதற்கு ₹19,999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் விமான டிக்கெட்டுக்கான கட்டணம் சேர்க்கப்படவில்லை. யாரெல்லாம் போறீங்க?

error: Content is protected !!