News June 13, 2024
நீட்: 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளில் பல குளறுபடிகள் நடைபெற்றதால் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேர விரயம், கேள்வித் தாள் மாற்றம் ஆகிய காரணங்களுக்காக 5 கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படவுள்ளது.
Similar News
News March 25, 2026
BREAKING: அடுத்தடுத்து விலகினர்.. அரசியல் பரபரப்பு

தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத வகையில் 5 முனை போட்டி என்பதாக மாறியுள்ளது. எதிர்பாராத விலகல்கள், கட்சி மாற்றம், புதிய கூட்டணிகள், புதிய கட்சிகள் என்றும் பரபரக்கிறது. இந்நிலையில், சரத்குமார், வைகோ, TTV தினகரன், வேல்முருகன் ஆகியோர் தாங்கள் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. அதிலும், கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்பது புதிய ஹைலைட்டாகவும் அமைந்துவிட்டது.
News March 25, 2026
கமல்ஹாசன் செய்தது தியாகம்: ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல், <<19467680>>நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு<<>> ஸ்டாலின் உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், TN முழுவதும் கமல்ஹாசன் வலம் வர வேண்டும் என்பது தனது அன்பான வேண்டுகோள் எனவும் குறிப்பிட்டுள்ளார். கமல் செய்திருப்பது தியாகம் என்று சுட்டிக்காட்டிய அவர், தன்னலத்தை பின் தள்ளி, TN நலனை முன்னிறுத்தியுள்ள அவரது முடிவை வரலாறு பாராட்டும் என்றும் கூறியுள்ளார்.
News March 25, 2026
BREAKING: தமாகாவுக்கு 5 சீட்.. தமமுகவுக்கு 1 சீட்..

NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவுக்கு 5 சீட்களை அதிமுக ஒதுக்கியுள்ளது. ஈரோடு மேற்கு, கிள்ளியூர், ஒட்டன்சத்திரம், ராணிப்பேட்டை, கும்பகோணம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் தாமரை சின்னத்தில் தமாகா போட்டியிடும் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.


