News April 19, 2025
நீட் தேர்வு பலி: TN முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் முன்பு அதிமுக மாணவர் அணி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் பொய் சொல்லி திமுக ஆட்சிக்கு வந்ததாகவும் கண்டன முழக்கம் எழுப்பினர். இதேபோல் TN முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Similar News
News September 10, 2025
அணி மாறி வாக்களித்த INDIA கூட்டணி MP-கள்

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் NDA வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளனர். தேர்தலில் INDIA கூட்டணியின் 315 எம்.பி.க்கள் வாக்களித்ததாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவில் சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. எனவே, INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் எதிரணி வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தது உறுதியாகியுள்ளது.
News September 10, 2025
சிபி ராதாகிருஷ்ணனுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு மற்றும் நாட்டின் ஜனநாயக கொள்கைகளுக்கான தனது கடமைகளை சிபி ராதாகிருஷ்ணன் உறுதியுடன் நிறைவேற்றுவார் என நம்புவதாக X தள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போல EPS உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
News September 10, 2025
இவங்களும் செல்லாத ஓட்டு போடுறாங்களாம்..!

படிக்காத பாமர மக்கள்தான் விவரம் தெரியாம செல்லாத ஓட்டு போடுறாங்கன்னு பார்த்தா, துணை ஜனாதிபதி எலெக்ஷன் வரை இந்த பிரச்னை இருக்கும் போலயே. இன்னைக்கு நடந்த எலெக்ஷன்ல, 767 பேர் மொத்தமா ஓட்டு போட்ருக்காங்க. அதுல சிபி ராதாகிருஷ்ணன் 452 ஓட்டு வாங்கிருக்காரு. சுதர்சன் ரெட்டி 300 ஓட்டு வாங்கிருக்காரு. மீதி இருக்கிற 15 செல்லாத ஓட்டாம். மாதிரி எலெக்ஷன்லாம் நடத்துறாங்க. அப்பவும் இப்படி நடந்தா எப்படி?