News March 26, 2025

நீட் தேர்வு: அடுத்தடுத்து 2 பேர் தற்கொலை!

image

ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பீஹார் மாணவர் ஹர்ஷ்ராஜ் தற்கொலை செய்து கொண்டார். கோட்டாவில் தங்கியிருந்த ஓட்டலில் அவரது உடல் மீட்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களுக்குள் ஜோத்பூரில் மற்றொரு மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார். ராஜஸ்தானில், இந்த ஆண்டு மட்டும் தேர்வு அழுத்தத்தால் 10 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்த எண்ணம் எழுந்தால், 104 என்ற எண்ணை அழைக்கவும்!

Similar News

News March 29, 2025

₹50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை

image

கர்நாடகா மாநிலம் கானாபூரில் சைபர் மோசடியில் ₹50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி செய்வதறியாது தற்கொலை செய்துகொண்டனர். முன்னாள் அரசு ஊழியரான நாசரேத்துக்கு, க்ரைம் பிரான்ச் காவல்துறை என கூறி தொலைபேசி மூலமாக இருவர் மிரட்டியுள்ளனர். தங்கள் சிம் கார்டை வைத்து மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி, ₹50 லட்சம் வரை பெற்றுள்ளனர். மேலும் பணம் கேட்க, வயதான தம்பதி விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

News March 29, 2025

இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக வேண்டும்: இபிஎஸ்

image

<<15922582>>நீட் <<>>மரணங்களுக்கு முதல்வரின் பதில் என்ன?, நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக வேண்டும் என்று இபிஎஸ் சாடியுள்ளார். ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது என்று மாணவர்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள், மாணவர்களை ஏமாற்றாதீர் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 29, 2025

த்ரிஷாவுக்கு திருமணம்? PHOTO

image

நடிகை த்ரிஷா (41) ‘காதல்’ குறித்து வெளியிட்டுள்ள பதிவு வைரலாகிறது. சில ஆண்டுகளுக்கு முன், தொழிலதிபருடன் நடைபெறவிருந்த திருமணம் பாதியில் நின்றது. அதன்பின் அவரது திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், மணப்பெண் கோலத்தில் இருக்கும் போட்டோ உடன் ‘Love always wins’ என X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக கமெண்ட் செய்கின்றனர்.

error: Content is protected !!