News June 19, 2024
தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

பாவோ நுர்மி தடகள போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். பின்லாந்தில் சர்வதேச தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், ஜெர்மனி உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் 85.97 மீ., தூரம் ஈட்டியை எறிந்த நீரஜ் (26) முதலிடம் பிடித்து, தங்கத்தைக் கைப்பற்றினார். டோனி, ஆலிவர் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.
Similar News
News March 22, 2026
நிர்வாகிகளை குஷிப்படுத்த விஜய் முடிவு

தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பாக கட்சி நிர்வாகிகளை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 26-ம் தேதி மாமல்லபுரத்தில் 2000-க்கும் மேற்பட்ட வட்ட, ஒன்றிய, நகராட்சி அளவிலான நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுடன் உரையாடி விஜய் போட்டோஷூட் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் உற்சாகமாக செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு நடக்கிறதாம்.
News March 22, 2026
பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, <<19433149>>தென்காசி, நெல்லை<<>> மாவட்டங்களில் ஏப்.1(புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஏப்.1-ம் தேதி முழு ஆண்டு தேர்வும் தொடங்கவிருப்பதால் பள்ளி மாணவர்களிடையே சற்று குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT
News March 22, 2026
தமிழர்கள் அறிவியலில் சிறந்தவர்கள்: கிரண் ரிஜிஜு

தமிழகத்தில் நல்லாட்சி அமைந்தால் தமிழர்களால் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும் என ம. அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் பேசிய அவர், தமிழர்கள் தொழில்நுட்பக் கல்வி & அறிவியலில் சிறந்து விளங்குகிறார்கள் என்றார். அதேசமயம் சினிமாவையும், நடிகர்களையும் அவர்கள் மிகவும் நேசிக்கிறார்கள்; அவர்களுக்கு வழிபாட்டுக்குரிய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார். உங்க கருத்து என்ன?


