News August 6, 2024

இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார் நீரஜ் சோப்ரா

image

பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் ஈட்டி எறிதலில் 84 மீட்டருக்கு மேல் எறிந்தாலே இறுதி போட்டிக்கு முன்னேறிவிடலாம். ஒவ்வொரு வீரருக்கும் 3 வாய்ப்புகள் வழங்கப்படும் நிலையில், முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் நீரஜ் சோப்ரா.

Similar News

News April 2, 2026

திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் விழாவையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்.6 (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் இயங்காது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. அதேபோல், தேர்தலையொட்டி, ஏப்.7 முதல் 10 வரை புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News April 2, 2026

₹48,000 சம்பளம்… 1,000 பணியிடங்கள் BANK JOBS

image

பஞ்சாப் & சிந்த் வங்கியில் காலியாகவுள்ள 1,000 உள்ளூர் அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: டிகிரி + வங்கி & நிதி நிறுவனங்களில் ஒன்றரை ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.20. மேலும் அறிய & விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க.

News April 2, 2026

ராகவ் சத்தாவுக்கு அதிர்ச்சி அளித்த ஆம் ஆத்மி

image

AAP ராஜ்யசபா துணை தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டுள்ளார். செல்போன் ரீசார்ஜ் கட்டணம் 28 நாள்கள் மட்டுமே நிர்ணயிக்கப்படுவது, ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு, ஏர்போர்ட்களில் உணவு பொருள்கள் அதிக விலைக்கு விற்பது போன்ற பல பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் பேசி மக்களின் கவனத்தை ராகவ் ஈர்த்திருந்தார். ஆனால் கட்சி தலைமைக்கு அவர் மீது ஏற்பட்ட அதிருப்தியால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!