News June 5, 2024
ஜூன் 7ஆம் தேதி NDA எம்.பிக்கள் கூட்டம்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் ஜூன் 7ஆம் தேதி டெல்லியில் கூடவிருக்கின்றனர். அக்கூட்டத்தில் நரேந்திர மோடி மக்களவைக் குழு தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார். அதன்பின் அனைத்து எம்.பிக்களின் ஆதரவு கடிதத்துடன் குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் மோடி. 8ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
Similar News
News September 13, 2025
ரயிலில் இருந்து ஃபோனை தவறவிட்டா என்ன செய்றது?

உங்கள் ஃபோன் விழுந்த இடத்தில் இருக்கும் கம்பத்தின் எண்ணையும், எந்த ஸ்டேஷனில் உங்கள் ஃபோன் விழுந்தது என்பதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உடனடியாக Railway Helpline-க்கு (182, 139) தொடர்பு கொண்டு இதை தெரிவித்தால் ரயில்வே போலீசார் உங்களுடைய ஃபோனை மீட்டுவிடுவர். பிறகு அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் ஃபோனை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். இந்த முக்கியமான தகவலை பிறருக்கு SHARE செய்யுங்கள்.
News September 13, 2025
விஜய்க்கு எதிராக டிரெண்டாகும் #சனியின்_பயணம்

திருச்சியில் தனது முதல் தேர்தல் பரப்புரையை விஜய் தொடங்கியுள்ள நிலையில், தவெகவினர் திரளாக பங்கேற்று உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். தொண்டர்கள் வெள்ளத்திற்கு இடையே ஏர்போர்ட்டிலிருந்து மரக்கடை பகுதிக்கு விஜய்யின் வாகனம் ஊர்ந்து செல்கிறது. இதனிடையே, விஜய்க்கு எதிராக ஒருதரப்பினர் #சனியின்_பயணம் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். அதேநேரம், #தமிழகவெற்றிக்கழகம் ஹேஷ்டேக்கும் டிரெண்டாகிறது.
News September 13, 2025
நேபாள் அமைதிக்கு இந்தியா உறுதுணை: PM மோடி

நேபாளத்தில் நடந்த Gen-z போராட்டத்தின் போது, அந்நாட்டின் பிரதமர் ராஜினாமா செய்ததால், இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் சுஷிலா கார்கிக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நேபாள மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.