News October 7, 2025

பிஹாரில் NDA கூட்டணிக்கே வெற்றி: கருத்துக்கணிப்பு

image

பிஹாரில் NDA கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என Matrize கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. NDA கூட்டணி (BJP, JDU) மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 150 – 160 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாகத்பந்தன் கூட்டணி (RJD, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள்) 70 – 85 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 2 – 5 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 7, 2025

விஜய் அதிரடி முடிவு: யாரும் எதிர்பார்க்காத திருப்பம்

image

கரூர் துயரம் விஜய்யின் தீவிர அரசியலுக்கு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது. இவ்விவகாரத்தில் 3 அறிக்கை, ஒரு வீடியோ வெளியிட்டு அமைதியாக இருக்கிறார்; ஊடகங்களையும் சந்திக்கவில்லை. இந்நிலையில், இனியும் காலதாமதம் செய்தால், அது கட்சியின் செயல்பாட்டை முழுமையாக பாதிக்கும் என கட்சி நிர்வாகிகள் அவரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து, கரூர் செல்வதற்கு முன், ஊடகங்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News October 7, 2025

அஜீரண கோளாறுக்கு இந்த மூலிகை தேநீர் தான் பெஸ்ட்!

image

வயிறு உப்புசம், வாயு தொந்தரவு & செரிமான பிரச்னைகளால் அவதிப்படுவோர் நிவாரணம் பெற அன்னாசிப்பூ தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அன்னாசிப்பூ, சுக்கு, மிளகு, மஞ்சள், சோம்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான அன்னாசிப்பூ தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.

News October 7, 2025

விஜய் ரசிகர்களுக்கு அண்ணாமலை அட்வைஸ்

image

கரூர் விவகாரத்தில் நீதிபதி கூறும் கருத்துகளை அரசியல் ஆக்கக்கூடாது என அண்ணாமலை கூறியிருக்கிறார். நீதிபதியின் குடும்பத்தையெல்லாம் இழுத்து திட்டுவதாக கூறிய அவர், இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறித்தினார். மேலும், கரூர் விவகாரத்தில் வழக்கு விசாரணை முடியும் முன்பே நீதிபதி, தவெக மீது கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியது சரியானது இல்லை என அண்ணாமலை விமர்சித்திருந்தார்.

error: Content is protected !!