News March 2, 2026
NDA-வில் ராமதாஸை சேர்க்க அன்புமணியின் 3 கண்டிஷன்ஸ்!

திமுக, தவெகவின் கூட்டணி கதவுகள் திறக்காததால் வேறுவழியின்றி NDA பக்கமே திரும்பியுள்ளாராம் ராமதாஸ். ஆனால், ராமதாஸை கூட்டணியில் சேர்க்க, அதிரடியாக 3 கண்டிஷன்ஸ் போட்டுள்ளாராம் அன்புமணி. அதன்படி, *ராமதாஸ் அணிக்கு மாம்பழம் சின்னத்தை கொடுக்க மாட்டோம் *முதலில் என்னுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்ய வேண்டும். *ராமதாஸ் இருக்கும் மேடையில் நான் ஏறமாட்டேன் என்பதே அந்த 3 கண்டிஷன்களாம்.
Similar News
News April 13, 2026
சங்கீதா முடிவில் மாற்றம்.. விஜய் தரப்பு மகிழ்ச்சி!

ஏப்.20-ம் தேதி சங்கீதா செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, வரும் 20-ம் தேதி அன்று விவகாரத்து வழக்கு விசாரணைக்கு சங்கீதா, விஜய்க்கு எதிராக ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், விஜய் தரப்பு சங்கீதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் மனம் மாறிய அவர், செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
News April 13, 2026
இசைக்குயில்களின் இறப்பில் இவ்வளவு ஒற்றுமையா..!

ஒரே துறையை தேர்வு செய்து உச்சம் தொட்ட இசைக்குயில் சகோதரிகளான லதா மங்கேஷ்கர் – ஆஷா போஷ்லே இறப்பிலும் பல ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் தங்களது 92-வது வயதில் மண்ணை விட்டு மறைந்தனர். லதா மங்கேஷ்கர் (2022 பிப்.6), ஆஷா போஸ்லே (2026 ஏப்.12) இருவர் உயிரிழந்த நாளும் ஞாயிற்றுக்கிழமை. அதுமட்டுமின்றி, மும்பை ப்ரீச் கேன்டி ஹாஸ்பிடலில்தான் 2 சகோதரிகளின் இறுதி மூச்சும் நின்று போயுள்ளது.
News April 13, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹14,060-க்கும், சவரன் ₹1,12,480-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) 1% சரிந்துள்ளதன் விளைவாகவே நம்மூர் சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. கடந்த 3 நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,320 குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.


