News January 27, 2026
NDA-வில் இபிஎஸ் உடன் இணையும் ஓபிஎஸ்!

NDA-வில் மீண்டும் OPS-ஐ இணைக்க தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. TTV தினகரனை தொடர்ந்து, OPS-யும் கூட்டணியில் சேர்க்க EPS இசைவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக OPS உடன் TTV தினகரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மதுரையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த TTV தினகரன், OPS நிச்சயம் தங்கள் கூட்டணிக்கு வருவார்; அவர் வேறு எங்கும் செல்ல மாட்டார் என்றார். உங்கள் கருத்து என்ன?
Similar News
News January 27, 2026
மகளிர் உரிமைத் தொகை ₹2,500.. புதிய தகவல்

தேர்தல் நெருங்குவதால், மகளிர் வாக்குகளை பெற திமுக, அதிமுக முனைப்பு காட்டுகின்றன. அதிமுக ஆட்சிக்கு வந்தால் குலவிளக்கு திட்டத்தில் மகளிருக்கு ₹2,000 வழங்கப்படும் என EPS அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்து CM ஸ்டாலின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று தஞ்சையில் பேசிய ஸ்டாலின், <<18967001>>தேர்தலில் பெண்களை நம்பியே இருக்கிறேன்<<>> என கூறியிருந்தார்.
News January 27, 2026
திமுக கூட்டணி மண்ணைக் கவ்வும்: அன்புமணி

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகத்திற்கு தேடித் தந்ததே திமுகவின் சாதனை என அன்புமணி சாடியுள்ளார். தனது அறிக்கையில், அண்ணா பல்கலை., மாணவி விவகாரம் உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு கணக்கு தீர்க்க மக்கள் தயாராக உள்ளதாகவும், தேர்தலில் DMK கூட்டணி மண்ணைக் கவ்வும் என்றும் கூறியுள்ளார்.
News January 27, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை .. கலெக்டர் அறிவித்தார்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்ய பிப்.7-ம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


