News January 21, 2026
NDA-வில் இணைந்த தினகரனை வரவேற்ற EPS

NDA கூட்டணியில் இணைந்த TTV தினகரனை வரவேற்பதாக EPS தெரிவித்துள்ளார். திமுக கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்த இந்த கூட்டணி இணைந்துள்ளதாக கூறிய அவர், நாம் ஒன்றாக இணைந்து திமுக குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து மக்களை காப்பாற்றுவோம் என பதிவிட்டுள்ளார். ஆனால் NDA கூட்டணியில் இணையும்போது TTV தினகரன் EPS பெயரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 11, 2026
WC T20I.. இந்திய ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்

WC T20I தொடரில் நாளை இந்தியா நமீபியாவை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டிக்கான பயிற்சி செஷனில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அபிஷேக் சர்மா பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக சுந்தர் பயிற்சியில் ஈடுபடுவார் என கேப்டன் SKY தெரிவித்துள்ளார். வரும் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி நடைபெறவுள்ள சூழலில், அதற்குள் அபிஷேக் குணமடைந்து அணிக்கு திரும்புவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
News February 11, 2026
விஜய்யிடம் மெகா டீல் பேசினாரா அமித்ஷா?

விஜய்யை NDA-ல் இணைக்க பல திட்டங்களை தீட்டிய பாஜக கடைசியாக அவரிடம் மெகா டீலிங் ஒன்றை போட்டதாக கூறப்படுகிறது. இதற்காக தேர்தல் நிதி, DCM பதவி மற்றும் சில முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய ஒரு பெரும் பேரத்தை அமித்ஷாவே பேசினார் என்கின்றனர். ஆனால், ஆரம்பத்திலிருந்தே பாஜகவை ’கொள்கை எதிரி’ என விஜய் கூறிவருவதால் அமித்ஷாவிடம் விஜய் உறுதியாக ’நோ’ சொல்லியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News February 11, 2026
பள்ளிகளில் இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

பள்ளி மாணவர்களுக்கு இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது. பிப்.17-ம் தேதி வரை இதற்கான முகாம்கள் நடைபெறவுள்ளன. 2-19 வயதுடைய குழந்தைகள் 2.1 கோடி பேருக்கும், 20-30 வயதுடைய பெண்கள்(கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் தவிர) 54.42 லட்சம் பேருக்கும் ‘Albendazole’ மாத்திரை வழங்கப்படவுள்ளது. இந்த மாத்திரை குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழுக்களை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.


