News November 14, 2025

NDA கூட்டணி ஊழல் அற்றது: நயினார் நாகேந்திரன்

image

2026 தேர்தல் களம் சூடுபறக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் திமுகவை கடுமையாக சாடி வருகின்றன. இந்நிலையில், தேர்தலுக்காக வாக்குறுதியை மட்டும் கொடுப்பதே திமுகவின் வாடிக்கை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மக்களுக்காக எதையும் செய்யக்கூடிய, ஊழல் இல்லாததாக NDA கூட்டணி இருப்பதாகவும் குறிப்பிட்டார். மகளிர் உரிமைத்தொகையைக் கூட 2.5 ஆண்டுகள் கழித்தே திமுக அரசு வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.

Similar News

News November 14, 2025

பிஹார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பமே அபாரம்

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஜேடியூ- பாஜக கூட்டணி 15 இடங்களிலும், ஆர்ஜேடி – காங்., கூட்டணி 10 இடங்களிலும், ஜன் சுராஜ் 2 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

News November 14, 2025

By Election Results: வாக்கு எண்ணும் பணி தொடங்கியது!

image

தெலங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்கள் & ஜம்மு காஷ்மீரில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளன. ஜூபிளி ஹில்ஸ் (தெலங்கானா), தரன் தரன் (பஞ்சாப்), கட்ஸிலா (ஜார்க்கண்ட்), அன்டா (ராஜஸ்தான்), டம்பா (மிசோரம்), நுவாபடா (ஒடிசா), புட்கம், நக்ரோட்டா (ஜம்மு காஷ்மீர்) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவ.11-ல் நடைபெற்றது.

News November 14, 2025

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியுள்ளது. பிஹார் சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 67.13% வாக்குகள் பதிவாகியிருந்தன. குறிப்பாக, ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்குகள் செலுத்தியுள்ளனர். மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 2,616 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

error: Content is protected !!