News March 15, 2026
NDA கூட்டணியில் விஜய்? திமுக ரியாக்ஷன்

NDA கூட்டணியில் இணையுமாறு விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக TKS இளங்கோவன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் NDA கூட்டணி தோற்றுவிடும் என தெரிந்துதான் விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஒருவேளை NDA கூட்டணியில் விஜய் இணைந்தால், கூடுதலாக சில தொகுதிகளில் வெற்றிபெறலாம் என பாஜக நினைப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.
Similar News
News April 1, 2026
தேர்தல் பொறுப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் விலகல்

காங்., தேர்தல் மேலாண்மை ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியிலிருந்து MP மாணிக்கம் தாகூர் விலகியுள்ளார். காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு தாமதமாகும் நிலையில் இந்த விலகல் உள்கட்சியில் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கெனவே, திமுக உடனான கூட்டணியை உறுதி செய்வதற்கு முன்புவரை தவெக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டிலான மாணிக்கம் தாகூரின் கருத்துகள் கவனம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
News April 1, 2026
439 பெண்களுக்கு தந்தையான மாமனிதர்!

இது வினோத செய்தி அல்ல, வியந்து பாராட்ட வேண்டிய செய்தி. குஜராத்தை சேர்ந்த மகேஷ் சவானி என்ற வைர வியாபாரி 439 இளம் பெண்களுக்கு சொந்த செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார். 2008-ம் ஆண்டு மரணமடைந்த தன் ஊழியரின் மகளுக்காக முதல்முறை திருமணம் செய்து வைத்தவர், அதை இன்றும் தொடருகிறார். சாதாரணமாக திருமணத்தை முடிக்காமல், மணப்பெண்ணுக்கு தங்க நகைகள் போட்டு, பெண் வீட்டு சீர்வரிசையும் கொடுத்து வருகிறார்.
News April 1, 2026
பாஜகவிடம் டிமாண்ட் வைக்கிறாரா அண்ணாமலை?

தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் தெற்கு அல்லது மொடக்குறிச்சியில் போட்டியிட முடியுமா என அவரிடம் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம். ஆனால் கோவைக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு சட்டமன்ற தொகுதியை ஒதுக்கினால் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கிறேன் என அண்ணாமலை சொன்னதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>


