News March 15, 2026
NDA கூட்டணியில் விஜய்? திமுக ரியாக்ஷன்

NDA கூட்டணியில் இணையுமாறு விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக TKS இளங்கோவன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் NDA கூட்டணி தோற்றுவிடும் என தெரிந்துதான் விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஒருவேளை NDA கூட்டணியில் விஜய் இணைந்தால், கூடுதலாக சில தொகுதிகளில் வெற்றிபெறலாம் என பாஜக நினைப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.
Similar News
News March 29, 2026
இன்ஸ்டாவில் பெண்களின் அந்தரங்க போட்டோ.. உஷார்!

அண்மைக் காலமாக இன்ஸ்டாவில் Adult content அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக சில இளம்பெண்கள் இன்ஸ்டாவில் Subscription feature-ஐ பயன்படுத்தி (மாதத்திற்கு ₹89 – ₹890 வரை) தங்களது அந்தரங்க போட்டோக்களை பகிர்ந்து பணம் ஈட்டி வருகின்றனர். மெட்டா நிறுவனம் இதனை தடுக்க முயன்று வருவதாக தெரிவித்துள்ளது. ஆனாலும், SM-ல் பகிரப்படும் இதுபோன்ற போட்டோக்களை தடுக்க என்னதான் வழி?
News March 29, 2026
9 முறை திமுக வென்ற பெரம்பூர் தொகுதியில் விஜய்

பெரம்பூர் & திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடுகிறார். இதில் பெரம்பூர் தொகுதியில் இதுவரை திமுக 9, CPM 3, அதிமுக 2, காங்., 1 முறை வென்றுள்ளது. கடந்த 2021 தேர்தலில் திமுகவின் RD சேகர் 54,976 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரான NR தனபாலனை தோல்வியுறச் செய்தார். 2026 தேர்தலில் இத்தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் ஆர்.டி.சேகர், அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளரும் போட்டியிடுகின்றனர்.
News March 29, 2026
CPI வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், அத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
*தளி – ராமச்சந்திரன்
*திருத்துறைப்பூண்டி (தனி) – மாரிமுத்து
*ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – மகாலிங்கம்
*திருப்பூர் வடக்கு – ரவி
*பவானிசாகர் (தனி) – பி.எல்.சுந்தரம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


