News January 21, 2026

NDA கூட்டணியில் அமமுக, தேமுதிக இணைகிறதா?

image

பாஜக உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார். இந்நிலையில் அவரை பிரேமலதாவும், TTV தினகரனும் சந்தித்து NDA கூட்டணியில் இணைவது தொடர்பாக முடிவெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, தை பிறந்தால் வழி பிறக்கும் என இருவரும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 8, 2026

தொகுதியிலும் ‘V’-ஐ தேடும் விஜய்

image

கட்சி ஆரம்பித்ததில் இருந்தே ‘V’ செண்டிமெண்ட்டை விஜய் விடுவதாக தெரியவில்லை. கட்சி பெயர் முதல் மாநாடு நடத்தும் இடம் வரை ‘V’ வருவது போன்று பார்த்துக்கொள்கிறார். தேர்தலிலும் ‘V’ எழுத்தில் தொடங்கும் தொகுதியில் விஜய் களமிறங்குவதாக கூறப்படுகிறது. சென்னையில் விருகம்பாக்கம், வேளச்சேரி, விக்கிரவாண்டி, வேதாரண்யம் மற்றும் மத்திய மாவட்டங்களில் ‘V’ எழுத்தில் தொடங்கும் தொகுதியை சல்லடை போட்டு அலசுகிறார்களாம்.

News February 8, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 8, தை 25 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: சப்தமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

News February 8, 2026

தவெகவை வம்புக்கு இழுத்த உதயநிதி

image

விருதுநகரில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் தவெகவை மறைமுகமாக உதயநிதி ஸ்டாலின் அட்டாக் செய்து பேசினார். கொள்கை, லட்சியம் என்றால் என்னவென்று தெரியாமல் கட்டுப்பாடின்றி வெற்றுக் கூச்சல் போடும் ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் சுற்றுகிறது என்று சாடிய அவர், அவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பயனும் இல்லை; இன்னும் சொல்லப்போனால் அவர்களால் அவர்களுக்கே எந்த பயனும் கிடையாது என்று தெரிவித்தார்.

error: Content is protected !!