News January 31, 2026

NCP ஒன்றிணைவது இறுதி கட்டத்தில் இருந்தது: சரத் பவார்

image

அஜித் பவார் இறப்பதற்கு முன் மீண்டும் சரத் பவாருடன் இணைய பேச்சுவார்த்தை நடந்ததாக ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் அதனை சரத் பவார் உறுதி செய்துள்ளார். NCP-ஐ இணைப்பது குறித்து அஜித் பவார் தங்களுடன் பேசி வந்ததாகவும், பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், அஜித் பவாரின் மனைவி <<18994921>>சுனேத்ரா பவார்<<>> DCMஆக பதவியேற்பது குறித்து தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

Similar News

News February 5, 2026

அங்கன்வாடி பள்ளிகளுக்கு விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

அங்கன்வாடி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மே 1-ம் தேதி 31-ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் நிலவும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குட்டி பசங்களா, கொண்டாட்டத்துக்கு ரெடியாகிக்கோங்க!

News February 5, 2026

ஒரே சட்டமன்ற தொகுதியில் அதிகமுறை வென்றவர்கள் யார்?

image

அரசியலில் கால்பதித்து ஒரு தேர்தலில் வெற்றி பெறுவது என்பதே பெரிய விசயம். ஆனால் ஒரே தொகுதியில் அதிகமுறை வெல்வது என்பது சாதாரண விஷயமில்லை. அதற்கு தொகுதி மக்களின் அபரிமிதமான நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெறவேண்டும். அந்த வகையில் தற்போதைய TN அரசியல்வாதிகளில் ஒரு தொகுதியில் அதிக முறை வென்றவர்கள் யார் என்பதை வலதுபக்கம் Swipe செய்து பார்க்கலாம். இவர்களில் உங்கள் மனம் கவர்ந்தவர் யார் என்பதை சொல்லுங்க!

News February 5, 2026

திமுக கூட்டணியில் இருந்து முக்கிய கட்சி விலகலா?

image

திமுக கூட்டணியிலிருந்து யாரையும் விடுவதாக இல்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கூட்டணியில் உள்ளவர்கள் வேறு எங்கு சென்றாலும் அவர்களுக்கு எந்த சீட்டும் கிடைக்காது என்பது அவர்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவது பற்றி தலைமையே முடிவெடுக்கும் என்றார். திமுக கூட்டணியிலிருந்து காங்., வெளியேறவுள்ளதாக தகவல் கசிந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

error: Content is protected !!