News August 8, 2025
MGR ஸ்டைலில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்

தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு தயாராகியுள்ள நயினார் நாகேந்திரன் MGR பயன்படுத்திய காரின் பதிவெண்ணிலேயே(4777) பிரேத்யேகமாக வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. MGR தீவிர ரசிகரான நயினார், அதிமுகவின் மூலம் அரசியல் அடையாளம் பெற்றவர். வரும் 17-ம் தேதி நெல்லையில் தனது தேர்தல் பயணத்தை தொடங்கும் நயினார், அனைத்து தொகுதிகளிலும் MGR ஸ்டைலில் மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Similar News
News August 8, 2025
நகத்தில் இப்படி இருக்கா.. கவனியுங்க!

ஒருவரின் கை நகத்தின் கலரை வைத்தே அவரின் ஹெல்த் பற்றி சொல்லிவிடலாம் தெரியுமா?
✦நகத்தின் நடுவில் வெள்ளை கலர்: கல்லீரல் பிரச்னை
✦கருப்பு கோடுகள்: சரும புற்றுநோயாக இருக்கலாம்
✦மஞ்சள் நிறம்: தைராய்டு பிரச்சினை, நுரையீரல் பாதிப்பு
✦வெள்ளை புள்ளிகள்: நகம் முழுவதும் இருந்தால், துத்தநாகக் குறைபாட்டை குறிக்கிறது.
✦ஆரோக்கியமான நகங்களின் பளபளப்பாக, ஓரங்களில் வெள்ளையாக இருக்கும்.
News August 8, 2025
பிரேசில் அதிபருடன் பேசிய PM மோடி

பிரேசில் அதிபர் லூயிஸ் சில்வாவும் PM மோடியும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்க வரிவிதிப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அரசு வெளியிட்ட அறிக்கையில் இது பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்தியா – பிரேசில் இடையே வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆழமான பங்களிப்பை செலுத்த உறுதி பூண்டுள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார்.
News August 8, 2025
BREAKING: இல.கணேசன் ஹாஸ்பிடலில் அனுமதி

நாகாலாந்து கவர்னர் இல.கணேசன்(80) சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் கீழே விழுந்து தலையில் அடிபட்டதை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.