News November 16, 2024
நயன்தாரா பதிவு: திடீரென பல்டி அடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்

தனுஷிற்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட பதிவிற்கு, நடிகைகள் பலரும் லைக் செய்து ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகைகள் நஸ்ரியாவில் தொடங்கி, ஸ்ருதிஹாசன், பார்வதி என தனுஷுடன் நடித்த பலரும் லைக் செய்தார்கள். அந்த பட்டியிலில் ஐஸ்வர்யா ராஜேஷ் இருந்தார். லைக் செய்து ஆதரவளித்தவர், திடீரென தனது லைக்கை நீக்கியிருக்கிறார். என்ன நினைத்து லைக் செய்தாரோ, என்ன நினைத்து நீக்கினாரோ..ஒண்ணுமே புரியல..
Similar News
News March 28, 2026
மதுரை: பள்ளி மாணவி கர்ப்பம்; மாணவன் மீது வழக்கு!

அலங்காநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை அதே பள்ளியின் 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவன் காதலிப்பதாக கூறி பழகினார். உடல் நலம் பாதித்த சிறுமியை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது 2 மாத கர்ப்பம் எனத் தெரியவந்தது. இதையடுத்து மாணவன் மீது சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
News March 28, 2026
போட்டி தொடங்கும் முன்பே.. RCB-க்கு SHOCK

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று IPL 2026 சீசன் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் RCB உடன் SRH அணி மோதுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக RCB வீரர் ஜோஸ் ஹேசில்வுட் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் மற்றொரு வீரரான நுவான் துஷாராவும் விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கெனவே தனிப்பட்ட காரணங்களால் யாஷ் தயாள் இந்த சீசனிலிருந்து வெளியேறினார்.
News March 28, 2026
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக டி.வி.பாலமுருகன் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வெளியான வேட்பாளர் பட்டியலில் ஆத்தூரில் விஸ்வநாதன் என்பவர் போட்டியிடுவார் என EPS அறிவித்தார். இதனால், அதிருப்தி அடைந்த டி.வி.பாலமுருகன், அதிமுகவில் இருந்து விலகி, ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.TNElection2026


