News July 25, 2024
புதிய போஸ்டரை வெளியிட்ட நயன்தாரா

விக்னேஷ் சிவன் இயக்கத்தின் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு ‘LIC’ என பெயர் வைத்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு வரவே தற்போது Love Insurance Kompany (Lik) என ஐயரை மாற்றியுள்ளனர். இப்படத்தின் பெயரை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் நயன்தாரா, பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 11:11 மணிக்கு இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
ஹீரோ ரோல் போர் அடித்து விட்டது: மம்முட்டி

பல டாப் ஹீரோக்கள் எத்தனை வயதானாலும் சரி, ஹீரோவாகவே நடிப்பர். ஆனால் மம்முட்டி சமீபமாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து அசத்தி வருகிறார். ‘களம் காவல்’ படத்தில் வில்லனாக நடிக்கும் அவர், ‘ஹீரோவாக நடிப்பதில் உற்சாகமில்லை, சீனியர், வில்லன் பாத்திரங்களில் தான் நடிப்பு திறமையை காட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார். ஸ்டார் இமேஜை விட நடிகராக இருப்பதே பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 1, 2025
BREAKING: 10 மாவட்ட பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

டிட்வா புயல் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை தொடரும். எனவே, பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.
News December 1, 2025
மதிமுக கூட்டணி மாற வாய்ப்பு: மல்லை சத்யா

திமுக கூட்டணியில் மதிமுக மதில் மேல் பூனையாகத்தான் எப்போதும் இருப்பதாக மல்லை சத்யா தெரிவித்துள்ளார். மதிமுகவுடன் பேச்சுவார்தை நடத்தியதை எல்.முருகன் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கூறிய அவர், நிச்சயமாக மதிமுக கூட்டணி மாறுவதற்கான சூழல் இருப்பதாக பேசியுள்ளார். மேலும், துரைவைகோ அவ்வளவு பரிசுத்தமானவர் என்றால் MP பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனித்து நின்று தேர்தலை சந்திக்க வேண்டும் என விமர்சித்துள்ளார்.


