News May 23, 2024
கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா?

லியோ, டாடா உள்ளிட்ட படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றிய விஷ்ணு எடவன், நடிகர் கவினை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், கவினுக்கு ஜோடியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விகர்ணன் அசோக் இயக்கும் மாஸ்க் படத்திற்கு பிறகு, இப்படத்திற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளது.
Similar News
News March 7, 2026
திராவிட மாடலால் ஆங்கிலம் பேசிய PM மோடி: உதயநிதி

சமீபத்தில் மதுரையில் நடந்த NDA மாநாட்டில் PM மோடி ஆங்கிலத்தில் உரையாற்றினார். இந்நிலையில், அவர் TN வந்தபோதெல்லாம் ஹிந்தியில் பேசியது தப்புத்தப்பாக தமிழில் பெயர்க்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் ஆங்கிலத்தில் பேசியதாகவும் DCM உதயநிதி தெரிவித்துள்ளார். இது தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்றும், PM மோடியை ஆங்கிலத்தில் பேச வைத்தது திராவிட மாடல் ஆட்சி தான் எனவும் கூறியுள்ளார்.
News March 7, 2026
அப்துல் கலாம் பொன்மொழிகள்

*அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது *சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும் *எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
News March 7, 2026
பொதுமக்களை ஈரான் தாக்குகிறது: USA

USA, ஈஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், 12-க்கும் அதிகமான நாடுகளில் வாழும் பொதுமக்களை ஈரான் திட்டமிட்டே தாக்குவதாக USA குற்றஞ்சாட்டியுள்ளது. ஈரானின் பயங்கரவாத படைகள் செய்யும் அட்டூழியத்தை ஏற்க முடியாது என்றும், இந்த தாக்குதல்களுக்கு அவர்கள் கண்டிப்பாக பதில் சொல்வார்கள் எனவும் USA கூறியுள்ளது.


