News December 21, 2024
நயன்தாராவுக்கு பணத் திமிர், அகங்காரம்.. சுசித்ரா தாக்கு

நயன்தாராவுக்கு பணத் திமிர், அகங்காரம் பிடித்திருப்பதாக பாடகி சுசித்ரா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, தனுஷ் விவகாரத்தில் உண்மையை சொல்லியதால் நயன்தாராவை தாம் பாராட்டியதாகவும், மற்றபடி வேறு இல்லை என்றார். தனுஷ், நயன்தாரா மோதல், 2 பணக்காரர்கள் இடையேயான மோதல் என்ற சுசித்ரா, டிவிக்களுக்கு நயன் அளித்த பேட்டி, அவரின் அகங்காரத்தை வெளிப்படுத்துகிறது என்று சாடினார்.
Similar News
News September 4, 2025
இந்த பொருள்களுக்கெல்லாம் இனி GST கிடையாது

*33 அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், புற்றுநோய் மருந்துகள், அரிய நோய்களுக்கான மருந்துகள்.
*தனிநபர் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடுகள்.
*நோட்புக்ஸ், பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள்கள்.
*UHT பால், பனீர், பீட்சா பிரட், சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி.
56-வது GST கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இந்த GST சீர்திருத்தங்கள், செப்.22 முதல் அமலுக்கு வருகிறது.
News September 4, 2025
IPL தொடருக்கு 40% GST வரி

இந்திய ரசிகர்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் IPL உள்ளிட்ட விளையாட்டு தொடர்களுக்கு 40% GST வரி விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளுக்கு இந்த 40% GST என்பது பொருந்தாது. இந்த அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளுக்கான டிக்கெட் ₹500-க்கு அதிகமாக இருந்தால் 18% GST வரி செலுத்த வேண்டும் என்று GST சீர்திருத்தத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க