News September 10, 2025
நடிகை நயன்தாராவுக்கு அதிர்ச்சி

நயன்தாராவின் ஆவணப்பட சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. NRD பட காட்சியை பயன்படுத்தியதாக, தனுஷ் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது, சந்திரமுகி பட காட்சியை பயன்படுத்தியதாக, ₹5 கோடி கேட்டு AP இண்டர்நேஷனல் நிறுவனம் ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளது. இதற்கு, அக்.6-க்குள் பதிலளிக்குமாறு ஆவணப்படம் தயாரித்த டார்க் ஸ்டூடியோவுக்கு கோர்ட் உத்தரவிட்டிருப்பது நயன்தாரா தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 8, 2026
சட்டமன்ற தேர்தலில் கோவையில் களமிறங்கும் செந்தில்பாலாஜி?

கோவை மண்டல திமுக பொறுப்பாளராகச் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்ட பின், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக அபார வெற்றி பெற்றது. இதனால் வரும் தேர்தலில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேண்டுமெனப் பல நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர் கோவை அல்லது கரூர் என எந்த தொகுதியில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் சூடுபிடித்துள்ளது. உங்கள் கருத்து என்ன மக்களே?
News March 8, 2026
செல்வாக்கை இழந்ததால், ₹5000 கொடுத்த திமுக: EPS

அந்தியூரில் பிரசாரம் மேற்கொண்ட EPS, திமுக MLA-வின் ஹாஸ்பிடலில் ஏழைகளிடம் கிட்னி திருடப்பட்டதாக குற்றம் சாட்டினார். திமுகவினர் போதைப்பொருள் விற்பதால், சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது என்றும், திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் ₹5 லட்சம் கோடி கடன் வாங்கி, மக்கள் மீது வரிச்சுமையை அதிகரித்துள்ளதாகவும் விமர்சித்தார். மேலும், மக்களிடம் செல்வாக்கை திமுக இழந்ததால் தான் ₹5000 வழங்கி இருப்பதாக விமர்சித்தார்.
News March 8, 2026
TN-ல் NDA கூட்டணி ஆட்சி உறுதி: அமித்ஷா

மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் வரும் தேர்தலில் NDA கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என அமித்ஷா தெரிவித்துள்ளார். டேராடூனில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் விரோத அரசுகளை வெளியேற்ற மக்கள் தயாராகி வருவதாக கூறினார். தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என EPS கூறி வரும் நிலையில், அதற்கு முரணாக அமித்ஷா பேசி வருவது பேசுபொருளாகியுள்ளது.


