News November 18, 2024
பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாரா.. ‘ஸ்வீட் 40’

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து, தமிழில் நயன்தாராவாக ‘ஐயா’ திரைப்படத்தில் அறிமுகமானார். தனது தனித்துவமான அழகால் கோலிவுட்டை கிறங்கடித்த அவர், ஒருகட்டத்தில் பெரும் சறுக்கலை சந்தித்தார். பின்னர் பல தடைகளையும், விமர்சனங்களையும் தாண்டி லேடி சூப்பர் ஸ்டாரானது தான் நயன்தாராவின் மிரட்டல் ‘கம் பேக்’. HAPPY BIRTHDAY நயன்தாரா.
Similar News
News April 6, 2026
தென்காசி: இந்த கார்டு இருந்தால் மருத்துவம் இலவசம்

தென்காசி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் தரமான இலவச மருத்துவத்தை பெறலாம். இதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Card பெற <
News April 6, 2026
EPS-ஐ பந்தயத்துக்கு அழைத்த துரைமுருகன்

தனது உடல்நலன், வயது மூப்பு குறித்த EPS-ன் பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். வேலூர் பிரசாரத்தில் பேசிய EPS, எழுந்து நடக்கவே முடியாத துரைமுருகனால் எப்படி தொகுதி முழுக்க சென்று மக்களின் குறைகளை கேட்க முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள துரைமுருகன், வேண்டுமென்றால் EPS-ஐ என்னுடன் நடைபயிற்சி போட்டிக்கு வரச் சொல்லுங்கள் பார்க்கலாம் என கூறி அழைப்பு விடுத்துள்ளார்.
News April 6, 2026
தமிழகத்தில் 9 பேருக்கு தூக்கு தண்டனை.. பரபரப்பு தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. முதல் குற்றவாளியான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் சேர்த்து ₹15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கின் விசாரணை, 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி முத்துக்குமரன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.


