News August 11, 2024
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நயன்தாரா?

‘பிக்பாஸ்’ 8 நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகிய நிலையில் அடுத்து யார் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியில் இணையவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. தற்போது நயன்தாரா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
Similar News
News March 6, 2026
LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு

வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ்க்கு(LPG) தட்டுப்பாடு வராமல் இருக்க LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. LPG-க்கு தேவையான அனைத்து எரிவாயுவையும் 3 அரசு நிறுவனங்களுக்கு (IOC, BPCL, HPCL) மட்டும் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. ஈரான் போர் சூழலால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ள நிலையில், அதை தடுக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
News March 6, 2026
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம்.. நயன்தாரா வாழ்த்து REWIND

விஜய் – த்ரிஷா சர்ச்சை SM-ல் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. இதனிடையே, த்ரிஷாவின் நிச்சயதார்த்தத்திற்கு நயன்தாரா வாழ்த்து தெரிவித்த பழைய பதிவு SM-ல் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், த்ரிஷா, வருண் ஆகியோருக்கு வாழ்த்துகள் என நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். 2015-ம் ஆண்டு வருண் என்பவருடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணம் நின்றுபோனது குறிப்பிடத்தக்கது.
News March 6, 2026
வாயைச் சுற்றி கருப்பா இருக்குதா? TIPS

வாயை சுற்றி கருப்பாக இருப்பதால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறதா? இதனை ஈசியா சரி செய்யலாம். எலுமிச்சை பழத்தை வெட்டி 2 நிமிடங்கள் வாயைச் சுற்றி தேய்க்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், இறந்த செல்கள் நீங்கி சருமத்தில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கருமையை நீக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த TIPS பலருக்கும் உதவும் என்பதால் SHARE பண்ணுங்க.


