News April 15, 2024
நயினார் நாகேந்திரன் ஆஜராக சம்மன்

ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஏப்.22ல் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், தனக்கு எவ்வித சம்மனும் விரவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரின் மைத்துனர் துரை என்பவரிடம் சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
Similar News
News December 2, 2025
தூத்துக்குடி விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வேளாண்மை திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 25 ஆயிரம் வேப்பமரக்கன்றுகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அந்தந்த பகுதியில் உள்ள வட்டார உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE
News December 2, 2025
கரூர் துயர வழக்கை CBI விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு

கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை CBI விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில்(SC) தவெக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழக அரசு நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு(SIT) விசாரணை தொடர அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. SC உத்தரவின்பேரில் CBI அதிகாரிகள் ஒரு மாதமாக கரூரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 2, 2025
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக IMD தெரிவித்துள்ளது. இது சென்னைக்கு 30 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது இன்று இரவு சென்னை – பாண்டிச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


