News April 24, 2024
நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன்

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது. தேர்தல் பரப்புரை நேரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ₹4 கோடி பணம் சிக்கியது. இதனை நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எடுத்துச் செல்வதாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அதன்பேரில் நயினாரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News January 12, 2026
உலகின் மிகப்பெரிய கோயில்கள்

கோயில்கள் பல நூற்றாண்டுகளை கடந்து வரலாற்றையும் கட்டடக்கலையையும் பறைசாற்றுகின்றன. பெரும்பாலான கோயில்கள் மிகப்பெரிய பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், பரப்பளவின் அடிப்படையில் மிகப்பெரிய கோயில்கள் என்னென்னவென்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்க எந்த கோயிலுக்கு போயிருக்கீங்க?
News January 12, 2026
BREAKING: விஜய் பக்கா ப்ளான் இதுதான்!

கரூர் கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான CBI விசாரணைக்கு விஜய் இன்று காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார். டெல்லி விமான நிலையம் முதல் CBI அலுவலகம் வரை, ரசிகர்கள் கூடி விடாமல் இருக்க, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு 2 நாள்கள் விசாரணையை முடித்து நாளை மாலை சென்னை திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
News January 12, 2026
பொங்கல் தொகுப்பு: பெண்கள் ஏமாற்றம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 2.22 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலான கடைகளில் சேலை பற்றாக்குறை காரணமாக கடந்த 2 நாள்களாக வேட்டி மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து ரேஷன் ஊழியர்களிடம் கேட்டும் பதில் இல்லாததால், பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


