News April 15, 2024
FIR பதிவால் நயினார் நாகேந்திரனுக்கு வந்த இடையூறு

பண பறிமுதல் விவகாரத்தில் FIR பதிவு செய்யப்பட்டதால் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 6இல் நெல்லை ரயிலில் அவருக்கு நெருக்கமான நபர்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது போலீசார் FIR போட்டுள்ள நிலையில், வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News October 15, 2025
தொடர்ந்து சரியும் IPL-ன் மவுசு!

பணம் கொழிக்கும் கிரிக்கெட் தொடரான IPL-ன் சந்தை மதிப்பு சரிந்து வருகிறது. 2023-ல் ₹93,500 கோடியாக இருந்த IPL-ன் மதிப்பு, 2024 சீசனில் ₹82,700-ஆகவும், 2025-ல் மேலும் ₹6,600 கோடி குறைந்து, தற்போது ₹76,100 கோடியாகவும் உள்ளது. ஆன்லைன் மணி கேம்கள் தடை செய்யப்பட்டது, ஒரே நிறுவனத்துக்கு மீடியா உரிமை அளிக்கப்பட்டது இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாகும். உங்களுக்கும் IPL ஆர்வம் குறைந்துவிட்டதா?
News October 15, 2025
தனிநபரை பலிகடா ஆக்குவது நோக்கம் அல்ல: CM ஸ்டாலின்

கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழி சுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது அரசின் கடமை எனவும் கூறியுள்ளார். இதேபோல் இனி நடக்காமல் தடுக்க SC தீர்ப்பின் அடிப்படையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) அரசு வகுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News October 15, 2025
ஏற்றத்தில் முடிந்த சந்தைகள்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 575 புள்ளிகள் உயர்ந்து 82,605 ஆகவும், நிஃப்டி 178 புள்ளிகள் உயர்ந்து 25,323 ஆகவும் இருந்தன. குறிப்பாக Bajaj Finance, Asian Paints, Nestle, HDFC Bank, TCS உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்ததால், அதில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீங்கள் வாங்கிய SHARE லாபம் தந்ததா?