News July 20, 2024
தமிழக பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன்?

நயினார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவராக நியமிக்க மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை படிப்புக்காக வெளிநாடு செல்ல மோடி அனுமதித்துள்ளதாகவும், அடுத்த மாதம் அண்ணாமலை வெளிநாடு செல்வார் எனவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நயினாருக்கு தலைமை பொறுப்பு வழங்கப்படும் எனவும், அண்ணாமலை திரும்பி வந்தால் தேசிய அளவில் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News November 26, 2025
அரியலூர்: வழக்கில் இருந்து MLA விடுதலை

தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டித்து, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது. அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த வழக்கு நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், இன்று அந்த வழக்கில் இருந்து அரியலூர் MLA சின்னப்பா உட்பட முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்களை மாவட்ட முதன்மை நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
News November 26, 2025
BIG BREAKING: விஜய்யை சந்தித்தார் செங்கோட்டையன்

அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்த கே.ஏ.செங்கோட்டையன் சற்றுமுன், பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். நாளை தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். காலையில், செங்கோட்டையன் தனது அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்த பிறகு, திமுக தரப்பிலும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
News November 26, 2025
6, 6, 6, 6, 6, 6, 6, 6, 6, 6 மிரட்டல் அடி

சையது முஷ்டாக் அலி கோப்பையில் குஜராத் கேப்டன் உர்வில் படேல் 31 பந்துகளில் சதம் அடித்துள்ளார். அவர் மொத்தமாக 37 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 119* ரன்களை குவித்தார். முதலில், சர்வீசஸ் அணி 20 ஓவர்களில் 182/9 ரன்கள் எடுத்தது. உர்வில் படேலின் அபாரமான ஆட்டத்தின் மூலம், 12.3 ஓவர்களில் குஜராத் எளிதில் வெற்றி பெற்றது. 2024-ம் ஆண்டு தொடரிலும், உர்வில் 28 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.


