News August 25, 2024
டைரக்டர் வேலையில் குறுக்கிடும் நயன், கவின்?

இயக்குநர் விஷ்னு எடவனின் பணியில் நயன்தாரா, கவின் ஆகியோர் அதிகம் குறுக்கிடுவதாக செய்தி வெளியாகியுள்ளது. அவரது இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவின் நாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தில் 2 பேரும் அவரது வேலையில் தலையிடுவதாக தயாரிப்பாளரிடம் விஷ்னு எடவன் புலம்பி தள்ளி விட்டாராம். அவர் இயக்குநரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.
Similar News
News March 7, 2026
BREAKING: விஜய் மனைவி அடுத்த பரபரப்பு

நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க கோரி, விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். லண்டனில் வசித்து வருவதால், சென்னையில் தனக்கு தனியாக வீடு இல்லை. நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க கோரினால், வழக்கறிஞர் மூலம் விஜய் தரப்பு மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ள அவர், விவாகரத்து வரை நீலாங்கரை வீட்டிலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என விஜய்க்கு உத்தரவிட கோரியுள்ளார்.
News March 7, 2026
கமல்ஹாசனுக்கு தெலங்கானா அரசின் உயரிய விருது!

கமல்ஹாசனுக்கு தெலங்கானா அரசு ‘பைடி ஜெயராஜ்’ விருது அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டுக்கான Gaddar Telangana Film Awards சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. அதில், நடிகர் சிரஞ்சீவிக்கு NTR விருதும், நடிகை ரஷ்மிகாவுக்கு சிறந்த நடிகைக்கான(The Girlfriend) விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவில் கோலோச்சிய பைடி ஜெயராஜ், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றவர்.
News March 7, 2026
FLASH: மாருதி சுசுகி கார்களின் விலை ₹45,000 வரை குறைந்தது

கார் வாங்க காத்திருப்போருக்கு மாருதி சுசுகி நிறுவனம் அதிரடி ஆஃபர்களை வாரி வழங்கியுள்ளது. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் முதல் ஆல்டோ கே10 வரை பிரபலமான கார்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகையானது மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைவு என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். வலப்பக்கம் SWIPE செய்து பாருங்க.


