News January 21, 2025
சத்தீஸ்கரில் நக்சல் வேட்டை

சத்தீஸ்கரில் 14 நக்சல் தீவிரவாதிகளை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். நக்சல் இல்லா நாடு என்ற கொள்கையுடன் பாஜக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டில் சத்தீஸ்கரில் பல நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இன்று காலை நக்சலுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 14 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Similar News
News March 16, 2026
நீடிக்கும் இழுபறி.. அதிமுக கூட்டணியில் நடப்பது என்ன?

தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், NDA-வில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. இவ்விவகாரத்தில் திமுக கூட்டணி ஓரடி முன்னர் செல்வதாக கூறும் அரசியல் நோக்கர்கள், விஜய் வருகைக்காகவே இந்த இழுபறி நீடிக்கலாம் எனவும் கருத்து கூறி வருகின்றனர். ஆனால், தவெகவுடன் கூட்டணி பேசவில்லை என கூறும் EPS, ஏன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய இழுத்தடித்து வருகிறார் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
News March 16, 2026
திமுகவினரை கண்டாலே கோபம் எழுகிறது: நயினார்

காட்டுமன்னார்கோவில் அரசு ஹாஸ்பிடலின் பிரசவ வார்டுக்குள் புகுந்து, கஞ்சா போதை ஆசாமிகள் அரிவாளை காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திமுகவின் அவல ஆட்சியில், பெட்டிக்கடைகளில் கூட போதைப்பொருள்கள் கிடைப்பதாகவும், இதையெல்லாம் மறைத்துவிட்டு ’போதை நடமாட்டமே இல்லை’ என வாய்கூசாமல் விளம்பரப்படுத்தி வரும் திமுகவினரை கண்டாலே கடும் கோபம் எழுகிறது எனவும் சாடியுள்ளார்.
News March 16, 2026
தமிழகத்தில் 5 பேருக்கு மட்டும் ஒரு வாக்குச்சாவடி!

சட்டப்பேரவைத் தேர்தலில் தேனியின், வருசநாடு வாக்குச்சாவடி அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. வெள்ளிமலை அடர் வனப்பகுதியில் உள்ள துரைச்சாமி மரகதம் பள்ளியில், செந்தில், ஜெயராணி, பவுல், சுதா, ரோகித் ஆகிய 5 பேருக்கு மட்டும் தனியாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் திருவிழாவில் தகுதியுள்ள அனைவருக்கும் வாக்குரிமையை உறுதி செய்யவே இந்த ஏற்பாடு செய்துள்ளதாக CEC ஞானேஷ் குமார் நேற்று குறிப்பிட்டிருந்தார்.


