News August 24, 2024

விரைவில் நக்சல் இல்லாத இந்தியா: அமித் ஷா

image

2026க்குள் நக்சலைட்டுகள் இல்லாத இந்தியா உருவாக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரில் பேசிய அவர், நக்சலைட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில், 10 ஆண்டுகளில் 6,617 வீரர்கள் மற்றும் மக்கள் உயிரிழந்துள்ளதாக வேதனை தெரிவித்தார். நக்சலைட்டுகளை ஒடுக்கும் முயற்சி இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், அவர்களிடமிருந்து நாட்டை விடுவிக்கும் திறன் அரசுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News August 18, 2025

சென்னைக்கு படையெடுத்த மக்கள்: கடும் வாகன நெரிசல்

image

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை வந்ததால் சென்னையில் பணிபுரியும் வெளிமாவட்டத்தினர் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்நிலையில், விடுமுறை முடிந்து பலர் சென்னையை நோக்கி மீண்டும் படையெடுத்தனர். இதனால் நேற்றிரவு கிளம்பாக்கம், பெருங்களத்தூர், ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையும் பெய்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

News August 18, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 431 ▶குறள்: செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. ▶ பொருள்: இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.

News August 18, 2025

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா: எல்.முருகன்

image

பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் துரோகம் செய்கிறார் என எல்.முருகன் விமர்சித்துள்ளார். கூட்டணியில் இருந்து M.P, MLA ஆக வேண்டும் என்பதற்காக பட்டியலின மக்கள் எப்படி போனால் தனக்கு என்ன என்ற எண்ணத்தில் திருமாவளவன் இருப்பதாக கூறினார். கடந்த 5 ஆண்டுகளாக பட்டியலின மக்களின் பிரச்சனைகள் பற்றி அவர் வாயே திறக்கவில்லை என்றும், மாறி மாறி பேசி வருவதால் அவர் நிலையாக இல்லை என்பதை காட்டுவதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!