News October 3, 2024
நவராத்திரி: இறைச்சி உணவுகளுக்கு தடை

நவராத்திரி தொடங்கியதால், உச்சநீதிமன்ற கேண்டீனில் இறைச்சி உணவுகளுக்கு தடை விதித்து, வெங்காயம், பூண்டு சேர்க்காத உணவு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளனர். வழக்கமாக, விரதம் கடைபிடிக்கும் வழக்கறிஞர்கள் வீட்டில் இருந்தே உணவு எடுத்து வரும் நிலையில், இந்த நடைமுறையை பின்பற்றுவது தவறான முன்னுதாரணம் என கூறியுள்ளனர்.
Similar News
News August 27, 2025
Beauty Tip: முடி உதிர்வை உடனடியாக நிறுத்த சிம்பிள் டிப்

டென்ஷனால முடி கொட்டுதா? முடி கொட்டுறதுனாலயே இன்னும் அதிகமா டென்ஷன் ஆகுறீங்களா? முடி உதிர்வ உடனடியா குறைக்க இந்த ஹேர்பேக்கை Try பண்ணுங்க. ▶ 2 ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துக்கொள்ளுங்கள் ▶ அத்துடன் அரைத்த வெங்காய ஜூஸை மிக்ஸ் செய்ய வேண்டும் ▶தலைமுடியின் வேர் முதல் நுனி வரை இதனை அப்ளை செய்து 1 மணி நேரம் ஊறவிடுங்கள். ▶வாரத்திற்கு 2 முறை இதை செய்யுங்க. SHARE.
News August 27, 2025
ட்ரம்புக்கு எதிராக களமிறங்கும் தமிழகம்!

ட்ரம்பின் வரிவிதிப்பை கண்டித்து தமிழகத்தில் இடதுசாரி கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன. வரி விதிப்பால் பல உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்படும் நிலையில், அமெரிக்காவின் வர்த்தக போரைக் கண்டித்தும், ஏற்றுமதி தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தியும் போராட்டம் நடக்கவுள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி சென்னை, திருச்சி, கோவை, உள்ளிட்ட முக்கிய தொழில் நகரங்களில் இடதுசாரிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
News August 27, 2025
அஸ்வினின் புது முயற்சியை பார்க்க ஆவல்: பிரீத்தி

IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் அஸ்வின். மேலும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அஸ்வினின் மனைவி பிரீத்தி இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் மேற்கொள்ளும் புது முயற்சிகளையும், அதன் மூலம் அடையப் போகும் உயர்ந்த அளவிலான வெற்றிகளையும் காண ஆவலோடு இருப்பதாக கூறியுள்ளார்.