News July 14, 2024
பல் ஈறுகளை பாதுகாக்க உதவும் இயற்கை வழிமுறைகள்

பல் ஈறுகள் நம் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி காலை மாலை என இருவேளை பல் துலக்குங்கள். குறிப்பாக பல் துலக்கும்போது பல் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுத் துகள்கள் மற்றும் அழுக்குகளை கட்டாயம் நீக்க வேண்டும்.
பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். இந்த உணவுகள் உங்கள் ஈறுகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
Similar News
News November 22, 2025
கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் இன்று காலை வரை பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, லால்பேட்டை 49 மி.மீ, குறிஞ்சிப்பாடி 44 மி.மீ, பண்ருட்டி 35 மி.மீ, காட்டுமன்னார்கோவில் 27 மி.மீ, வடக்குத்து 26 மி.மீ, வேப்பூர் 18 மி.மீ, புவனகிரி 15 மி.மீ, கடலூரில் 13 மி.மீ என மாவட்டம் முழுவதும் 439.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழை பதிவாகியுள்ளது.
News November 22, 2025
வெள்ளி விலை ₹3,000 உயர்ந்தது

கடந்த 2 நாள்களாக குறைந்து வந்த வெள்ளியின் விலை இன்று(நவ.22) கிலோவுக்கு ₹3,000 அதிகரித்துள்ளது. கிராம் ₹172-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,72,000-க்கும் விற்பனையாகிறது. இந்த வாரத்தின் தொடக்க வர்த்தகத்தில்(நவ.17) கிலோ ₹1,73,000-க்கு விற்பனையான வெள்ளி வார இறுதி நாளான இன்று ₹1,000 குறைந்து வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. நாளை விடுமுறை என்பதால் இதே விலை நீடிக்கும்.
News November 22, 2025
பனையூரை ஃபோகஸ் செய்யும் அமித்ஷா.. பின்னணி என்ன?

அமித்ஷா டிசம்பர் இறுதிக்குள் சென்னை வர திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த விசிட்டில் கூட்டணி, சீட் ஷேரிங் பற்றி இறுதி செய்வதோடு, தவெக தரப்பிடம் கூட்டணி பற்றி அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக 3 நாள்கள் சென்னையிலேயே அவர் முகாமிட ஆலோசனைகள் நடந்துவருகிறதாம். அமித்ஷா பேச்சுவார்தை நடத்தினால், விஜய் கூட்டணிக்கு பிடிகொடுப்பாரா?


