News August 23, 2025
NATIONAL SPACE DAY: நாட்டின் சாதனை திருநாள்!

இந்திய அறிவியல் வரலாற்றில் பொன்னான நாள் இன்று. 2023-ல் இதே நாளில்(ஆக.23) தான் நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கியது. இதனால் நிலவில் கால்பதித்த 4-வது நாடு, தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதை கொண்டாடும் வகையில் ஆக.23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள்: Aryabhatta to Gaganyaan: Ancient Wisdom to Infinite Possibilities ஆகும்.
Similar News
News March 17, 2026
பாம்பன் மீனவர்களுக்கு மீண்டும் நீதிமன்ற காவல்

பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்.24 அன்று மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மார்ச்.16 மூன்றாவது முறையாக மீனவர்கள் வெளிச்சூரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்களை வருகிற மார்ச்.23 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
News March 17, 2026
புதுச்சேரி தேர்தல் கண்காணிப்புப் பணிகள் ஆய்வு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன், தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் நடைபெறும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, ‘1950’ என்றை கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் ‘cVIGIL’ செயலி மூலம் பெறப்படும் புகார்கள் குறித்து ஆய்வு செய்த அவர், புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News March 17, 2026
BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறார்.. அதிர்ச்சி

<<19394504>>திமுகவின் சமரச பேச்சுவார்த்தை<<>> தோல்வியடைந்ததால், கூட்டணியிலிருந்து விலக தமிழக வாழ்வுரிமைக் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் தொகுதிகளை கேட்டு விசிக, சிபிஐ, சிபிஎம் ஏற்கெனவே அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், வேல்முருகனின் விலகல் முடிவு என்பது திமுக கூட்டணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?


