News October 15, 2025

National Roundup: மங்கோலிய அதிபருடன் பேச்சுவார்த்தை

image

*இந்தியா வந்துள்ள மங்கோலிய அதிபரை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். *சாதிய பாகுபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய ம.பி. ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. *ராஜஸ்தானில் அரசு பஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 20 பேருக்கு, PM மோடி தலா ₹2 நிவாரணம். *பிஹாரில் 48 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

Similar News

News October 15, 2025

கோவா Ex.முதல்வர் காலமானார் .. PM மோடி இரங்கல்!

image

கோவாவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரவி நாயக்(79) மாரடைப்பால் காலமானார். காங்கிரஸ் கட்சி சார்பில் கோவா CM-ஆக 1991 & 1994-ல் இவர் பதவி வகித்துள்ளார். 2022-ல் பாஜகவில் இணைந்த ரவி நாய்க், தற்போதைய பாஜக அரசில் வேளாண்துறை அமைச்சராக இருந்தார். 7 முறை MLA-வாகவும், 1998-ல் MP-யாகவும் வெற்றி பெற்ற இவரின் மறைவுக்கு PM மோடி, கோவா CM என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News October 15, 2025

சிலிண்டருக்கும் Expiry Date இருக்கு தெரியுமா?

image

சிலிண்டரில் ஒரு ஆங்கில எழுத்தும், 2 எண்களும் எழுதியிருக்கும் கவனித்திருக்கிறீர்களா? இதுதான் உங்கள் சிலிண்டரின் Expiry Date. இதில், முதல் வரும் எழுத்து மாதத்தையும், பின்வரும் 2 எண்கள் ஆண்டையும் குறிக்கிறது. முதலில் வரும் எழுத்து A என்றால் ஜனவரி-மார்ச் என அர்த்தம்; B என்றால் ஏப்ரல்-ஜூன்; C என்றால் ஜூலை-செப்டம்பர்; D என்றால் அக்., -டிசம்பர்-ஐ குறிக்கும். அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News October 15, 2025

சீமானுக்கு மனநல பாதிப்பு: செல்லூர் ராஜூ

image

சீமான் அண்மை காலமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார் என செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். குறிப்பாக தவெக தொடங்கப்பட்டதில் இருந்துதான் அவர் இப்படி பேசுவதாக கூறிய அவர், விஜய்யை சீமான் தொடர்ந்து தாக்கி வருவதாக குறிப்பிட்டார். மேலும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களை விமர்சிக்க சீமானுக்கு எந்த தகுதியும் இல்லை எனவும் அவர் சாடியுள்ளார்.

error: Content is protected !!