News October 11, 2025
National Roundup: மருத்துவ மாணவி வன்கொடுமை

*கர்நாடக CM மாற்றம் குறித்த தகவலுக்கு டிகே சிவக்குமார் மறுப்பு
*மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை: எதிர்க்கட்சிகள் கண்டனம்
*டெல்லி – சென்னை நேரடி விமான சேவையை நவ.10-ல் துவங்குகிறது இன்டிகோ
*தற்கொலை செய்த ஹரியானா IPS அதிகாரியின் மனைவிக்கு சோனியா காந்தி கடிதம்
*AI ஆல் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் – நிதி ஆயோக் *வார இறுதியில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் – பிஹார் பாஜக.
Similar News
News October 11, 2025
மாத சம்பளம் பத்தாது… இதை முதலில் கவனிங்க!

தங்கத்தின் மதிப்பு 56% உயர்ந்துள்ளது; ஆனால், மக்களின் சராசரி சம்பளமோ 0.07% குறைந்துள்ளது. விலைவாசி உயரும் வேகத்தில், மாத சம்பளத்தை வைத்து செல்வம் சேர்ப்பதெல்லாம் ஆகாத காரியம் என்கிறார் நிதி ஆலோசகர் அக்சத் ஸ்ரீவஸ்தவா. மேலும், இன்றைய சூழலில் தங்கம், நிலம், பங்குகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதுதான் செல்வம் சேர்க்க சிறந்த வழி என்கிறார். கடின உழைப்பு போதாது, ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட்டும் வேணுமாம்.
News October 11, 2025
இது இந்தியாவில் மட்டும் தான்.. வேறு எங்கும் கிடையாது

இந்தியா, உலகில் வேறு எங்கும் இல்லாத ஏராளமான சிறப்புகளுக்கு சொந்தமான நாடு. இந்தியாவில் உள்ள அற்புதமான “உலகின் மிகப்பெரிய / உயர்ந்த / பழமையான / தனித்துவமான” இடங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா? இடங்கள் மற்றும் அதன் சிறப்புகளை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த இடம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 11, 2025
தீபாவளி பரிசாக ₹2,000.. அரசு ஏற்பாடு

PM கிசான் 21-வது தவணை தொகை, இமாச்சல், பஞ்சாப், உத்தராகண்ட் மாநில விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டது. தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில விவசாயிகளுக்கு அக்.18-ம் தேதி வாக்கில் செலுத்தப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில், விவசாயிகள் தீபாவளி கொண்டாட உதவும் வகையில் ₹2,000 தவணைத் தொகையை இன்னும் முன்கூட்டி (அடுத்த வாரம்) வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.