News October 25, 2025
NATIONAL ROUNDUP: தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது

*ஜம்மு -காஷ்மீரில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் ஆளும் கட்சியான தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களையும், பாஜக ஒரு இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளன. *காற்று மாசு அதிகரிப்பால், டெல்லியில் காற்று சுத்திகரிப்பான், முகக்கவசம் விற்பனை அதிகரித்துள்ளது. *ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே ஆற்றில் குளித்த 4 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
* ₹256 கோடி போதைப்பொருளுடன் தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது
Similar News
News October 25, 2025
எனது விவாகரத்தை சிலர் கொண்டாடினார்கள்: சமந்தா

விவகாரத்து, உடல் நலப் பிரச்னை என தடைகளை தாண்டி மீண்டும் நடிப்பு, தயாரிப்பு என சமந்தா பிஸியாக உள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில், தனக்கு மயோசிடிஸ் நோய் வந்தபோதும், விவாகரத்தின் போதும் பலரும் அதை கொண்டாடி மகிழ்ந்ததாக கூறியுள்ளார். அதை பார்த்து மனம் வலித்ததாகவும், பின்னர் படிப்படியாக அதில் இருந்து வெளியே வந்ததாகவும் சமந்தா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
விராட் கோலிக்கு ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை

விராட் கோலி விரைவில் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். விராட், ரோஹித் அணியில் தங்களுக்கான இடம் உறுதி என மெத்தனமாக இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விராட் விரைவில் பழைய நிலைக்கு வரவில்லை என்றால், 2027 உலகக்கோப்பையில் அவர் இடம்பிடிப்பது கடினமாகி விடும் எனவும் எச்சரித்துள்ளார்.
News October 25, 2025
வரலாற்றில் இன்று

*1881 – ஸ்பானிஷ் ஓவியர் பிக்காசோ பிறந்த நாள்.
*1854 – இந்தியாவில் அஞ்சல் துறை தொடங்கப்பட்டது.
*1951 – இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
*1987: கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் பிறந்த நாள்.
*2006 – பாண்டிச்சேரியின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.


